மு.மயூரனால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் சுரண்டல்களும் பொறுப்புக்கூறலும்
மெளனத்தின் நிழலில் நடக்கும் பாலியல் வன்முறையாளர்கள்: மு.மயூரனால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் சுரண்டல்களும் பொறுப்புக்கூறலும்
அண்மையில் மதூர் சத்யாவின் பாலியல் சுரண்டல்களும், பெண்களின் காணொளிகளைப் பகிர்ந்தமையும், அவற்றை வைத்துப் பெண்களை மிரட்டியமையும் தொடர்பில் இந்தியாவின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதூர் சத்யா கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார். இது கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரியான செயற்பாடாக பலராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மதூர் சத்யா கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்தக் கைது பெண்களைப் பாலியல் சுரண்டல்களுக்குட்படுத்தியமை தொடர்பில் அல்லாமல், குறிப்பாக பெண்களின் காணொளிகளை வைத்து அவர்களை மிரட்டிய குற்றத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சிக்கு, கட்சியின் உறுப்பினரான மு.மயூரனினால் பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பாலியல் சுரண்டல்கள் தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
கட்சியானது உடனடியாக செயற்பட்டு, //அக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் மு. மயூரன் முன்வைத்த விளக்கங்கள் நம்பகத்தன்மை அற்றவையாகவும் முன் பின் முரணானவையாகவும் சிலவற்றை ஏற்றுக்கொண்டதாலும் அவரை உடனடியாக கட்சி உறுப்பினருரிமையிலிருந்தும், அவர் கட்சியின் வெகுசன அமைப்புகளிலும் வகித்த பொறுப்புக்களிலிருந்தும் தற்காலிகமாக இடை நிறுத்தி வைப்பதென கட்சியின் அரசியற் குழு தீர்மானித்துள்ளது.// எனக்கூறி அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. ஆயினும், 5 வருடங்கள் கடந்த நிலையில் கட்சி மு.மயூரனை மீண்டும் உறுப்பினராக இணைத்துக்கொண்டுள்ளது.
அதேவேளை கடந்த வருடம் நடிகரும், எழுத்தாளருமான ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்கள், பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களை உள்ளடக்கிய அறிக்கைகளினூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
இந்த இரண்டு பாலியல் சுரண்டல் சம்பவங்களும் வெளிப்படுத்தப்பட்டபோது, குறிப்பாக இவர்களைப் பாதுகாக்க விரும்பியோர், ‘விரும்பித்தானே/சம்மதத்துடன்தா
முதலில் ‘இணக்கம்/ சம்மதமென்பது’ ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாகச் சுரண்டுவதற்காக வழங்கப்படுவதில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த நிபந்தனைகளினடிப்படையில் சம்மதம் வழங்கப்படுகின்றதென்பது கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். இதனை எளிதாகப் புரிந்துகொள்வதானால், இன்றுவரை திருமண உறவுகளுக்குள் இடம்பெறும் பாலியல் வன்கொடுமை எமது நாட்டில் குற்றமானதாகக் கருதப்படுவதில்லை. அதற்காக, எந்தவொரு பெண்ணும் திருமணத்திற்கான தமது சம்மதத்தினை வழங்குவதென்பது திருமண உறவிற்குள் தம்மைப் பாலியல் வன்கொடுமை செய்வதற்குத்தான் என அபத்தமாக யாரும் வாதிடுவதில்லை. அதுபோல சட்டரீதியாகக் குற்றமாகக் கருதப்படாமையினால் திருமணத்திற்குள் இடம்பெறும் பாலியல் வன்கொடுமைகள் சரியானவையெனவோ, குற்றமற்றவையெனவோ ஆகாது. அதுபோலவே காதல்/உறவில் ஈடுபடுவதற்கான சம்மதத்தினை, எந்த ‘நிபந்தனைகளினடிப்படையில்’ அச் சம்மதம் வழங்கப்பட்டது என்பதைக் கருத்திற்கொள்ளாமல், மேம்போக்கான முறையில், சம்மதத்துடனேதானே உறவிலிருந்தார்கள் எனக்கூறுவது அபத்தமானது.
தம்மைப் பாலியல்ரீதியாகச் சுரண்டுவதற்குத் தானறிய பெண்கள் உட்பட எவரும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை சிறு குழந்தையும் அறியுமாயினும், ஆணாதிக்க சமூகத்தில் இத்தகைய சாதாரண விடயங்களைக்கூட விளக்கவும், எடுத்துக் கூறவும் நாம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்
மு.மயூரன், ஷோபாசக்தி போன்றவர்களின் பாலியல் சுரண்டல் போக்குகளிலும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் தாங்கள் ‘பிரபலமானவர்கள்’, ‘ஆளுமையானவர்கள்’ என்பதைப் பயன்படுத்தி ‘தாம் பெண்களால் விரும்பப்படத் தக்கவர்கள்’ என்ற விம்பத்தினைத் தொடர்ந்தும் ஏற்படுத்தி வந்திருக்கிறார்கள். அதாவது ‘பெண்கள்தான் எம்மை விரும்புகிறார்கள்’, எங்களுக்கும் அவர்களின் உணர்வுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுபோலத் தான் இதுவரை தம்மை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்கள்.
இவர்களால் பாலியல் சுரண்டல் செய்யப்பட்டவர்களின் அனுபவங்கள் வெளிப்படுத்தப்பட்டபோது, அவை இந்த கட்டமைக்கப்பட்ட விம்பத்தின்மூலம் திசைதிருப்பப்பட்டது.
இவர்களின் பாலியல் சுரண்டல்கள் வெளிப்படுத்தப்பட்டபோது, பெண்கள் தம்மை ‘உடமையாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள்’ என இவர்கள் கூச்சலிட்டார்கள். உண்மையில் பெண்கள் இவர்களை உடைமையாக்கிக்கொள்ள விரும்பவில்லை.
ஒரு பெண், “உன்னைப்போல வெறுமனே ‘பாலியல்ரீதியான’ தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே உன்னுடனான இந்த இணைப்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறேன்” எனச் சொன்னால், முதலில் பலநூறாகச் சிதைவது இத்தகைய ஆண்களின் ‘ஈகோவாகத்தான்’ இருக்கும். பாலியல் தேவைக்காக மட்டுமே தன்னை நாடும் ஒரு பெண்ணை இந்த ஆணாதிக்க சமூகம் பார்க்கும் விதத்திலிருந்து இவர்கள் இருவரது பார்வையும் எந்த விதத்திலும் மாறுபட்டதில்லை. அதனால் பெண்கள் இவர்களுடன் உறவிலிருப்பதற்கு ‘இவர்களை விரும்ப வேண்டும்’ என இவர்களின் ஈகோ (Ego) விரும்பியது. அந்த விருப்பத்தை (உணர்வுரீதியாகவும், வார்த்தைகளினூடாகவும் பலவிதங்களில் முயற்சிசெய்து) ஏற்படுத்திக் கொண்டதும், அதன்பின் அந்தப் பெண்கள்தான் தம்மை ‘உடமையாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள்’ என இவர்கள் கூச்சலிட்டார்கள்.
ஒரு பெண்ணுடன் உறவிலிருக்கும்போது, அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் வேறு பல பெண்களுடன் உறவிலிருந்தது மட்டுமன்றி, ஒரு பெண்ணுடன் இருக்கும்போது வேறு பெண்கள் தொலைபேசியில் அழைத்தால், அதனை ‘வேலை விடயமாக’ அழைக்கின்றார்கள் எனப் பொய்கூறி திட்டமிட்டே மறைத்துவிட்டு மக்கள் மத்தியில் ‘புனிதர்’ வேடம் அணிந்துதிரியும் கயவர்கள் இவர்கள்.
இவர்களின் மற்றைய முக்கியமான ஒத்த தன்மை எதுவென்றால் ‘நான் யாருடனும் உறவிலிருப்பேன், நீ எனக்காக இருக்க வேண்டும்’ என்பதுதான். இவர்களுடன் காதல் உறவிலிருந்த பெண்கள் விலகி மற்றுமொரு உறவுகளுக்குள் சென்றபோதும், ‘உன்னை மறக்க முடியவில்லை’, ‘தனியாகத்தான் இருக்கிறேன்’ ‘நீ தான் விலகிவிட்டாய்’ என்பதுபோல பெண்களை குற்றவுணர்ச்சியடையச்செய்து, உணர்வுகளை சுரண்டி/மனதைக் குழப்பி, அவர்களது வாழ்வைச் சிதைத்து மீண்டும் தாம் விரும்பும் போதெல்லாம் அந்தப் பெண்கள் தம்முடன் வரக்கூடியவாறு அவர்களை தனிமைப்படுத்தி வைத்துக்கொள்ள முயற்சித்தார்கள். இது பல பெண்களினதும், அவர்களுடன் உறவிலிருந்தவர்களதும் வாழ்க்கையை முற்றுமுழுதாகச் சிதைத்தது.
பெண்கள் திறந்த (Open) உறவிற்கு விரும்பாத போதெல்லாம் (அது அவர்களின் தனிப்பட்ட தேர்வாக இருந்தபோதும்) மறைமுகமாக ‘அத்தகைய திறந்த உறவில் இருக்கும் என்னை நீ ஏற்றுக்கொண்டு உடனிருக்க வேண்டும்’ என இவர்கள் விரும்பினார்கள், அதையிட்டு பெண்களைப் பொய்களினடிப்படையில் இத்தகைய உறவுக்குள் திணித்தார்கள். ஒருவர் எத்தகைய உறவில் இருக்க விரும்புகிறார் என்பது அவரவர் தெரிவு. ஆயினும் பாதிக்கப்பட்ட பெண்கள் தமது சுயவிருப்பத்திற்கு மாறாக இவர்களின் திறந்த உறவினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனத் திணிக்கப்பட்டனர். அதுவே ‘முற்போக்கானது’ எனத் தொடர்ச்சியாக இப்பெண்களுக்குக் கூறப்பட்டது.
அதற்காகத் ‘திறந்த உறவினை’ இப் பெண்களிடம் மறைத்துப் பொய்கூறியது மட்டுமன்றி, ‘உன்னை மறக்கமுடியவில்லை’ எனவும், ‘உன்னுடன் இருக்கும் உறவு விசேடமானது’ எனவும் வெளிப்படையாகவே இப் பெண்களிடம்கூறி அவர்களைப் பாலியல்ரீதியாகத் தொடர்ந்தும் சுரண்டுவதற்காக அப் பெண்களைத் தனிமைப்படுத்தி, அவர்களின் வாழ்க்கையை சிதைத்தவர்கள் இவர்கள்.
மு.மயூரன் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் 18 வயதுகளில் உள்ள இளம் பிள்ளைகளுக்கு பாலியல் சுதந்திரம் பற்றிப் பாடமெடுத்து grooming செய்ததும், அந்தப் பிள்ளைகளை நாடுவதற்கான வாய்ப்பினைக் கொடுக்கும் தளங்களாக அரசியல், இலக்கியத் தளங்களைப் பயன்படுத்திக் கொண்டதும் அடங்கும்.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியானது, பெண்கள் விவகாரத்தில் தமக்கிருக்கக்கூடிய கூருணர்வற்ற தன்மையையும், அக்கறையின்மையையும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். பெண்களின் வாழ்க்கையைச் சிதைத்துப் பேணும் எந்தவொரு அமைப்பாலும் சமூகத்திற்குப் பயனேதுமில்லை. இன்று பாலியல் சுரண்டலில் ஈடுபட்ட மு.மயூரனுக்கெதிராக இந்தக் கட்சி தாமே வெளியிட்ட அறிக்கைக்கும் முரணாக அவரை உறுப்பினராக உறுதிப்படுத்தி, அவருக்கான தளங்களை அமைத்துக் கொடுக்கின்றது. மு.மயூரனுக்காகக் கட்சி எந்த விலையையும் கொடுக்கத் துணிந்தமையானது, ஆணாதிக்கத்தின் உச்சபட்ச சாட்சியாக இருக்கின்றது. கட்சிக்காக பல வருடங்கள் உழைத்த தோழர்கள் பலரையும் இழந்தாலும்கூட மு.மயூரனை கட்சிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டுமென்ற அந்த முடிவு, ஆணாதிக்க சமூகக் கட்டமைப்பு, பால்நிலைசார் வன்முறைகள் சாதாரணமயப்படுத்தப் பட்டிருக்கும் சமூகப்போக்கு, பாலியல் சுரண்டல்கள் போன்ற பெண்களுக்கெதிரான பாலியல் தவறுகளுக்கான தண்டனை விலக்களிக்கும் போக்கு(Impunity), ஆணாதிக்க, காலணித்துவப் பின்னணிகொண்ட, குறைபாடுகளைக் கொண்ட சட்டங்களை மட்டுமே அடிப்படையாக்க் கொண்டு ‘பெண்களுக்கெதிரான குற்றங்களை’ வரையறுக்கும் போக்கு, பால்நிலைசார் குற்றங்களில் சக ஆண்களுக்கு ஆதரவாக (எழுந்தமானவிதத்திலும், எதிர் அரசியல் நிலைப்பாட்டினைக் கொண்டிருந்தாலும்கூட) ஒன்றிணையும் போக்கினைக்கொண்ட ஆண்களுக்கிடையிலான பிணைப்பு (Male bond) போன்ற பல்வேறுபட்ட காரணிகளின் பின்னணியிலேயே புரிந்துகொள்ளப்பட வேண்டும். அவைதவிர, முதலாளித்துவக் கட்டமைப்பிற்கெதிராகப் போராடுவதாக நினைத்துக்கொள்ளும் இந்தக் கட்சி, முதலாளித்துவக் கட்டமைப்பில் பெண்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றார்கள், சுரண்டப்படுகின்றார்கள் என்ற புரிதல் துளியுமற்று செயற்படுகின்றமையானது வெளிப்படையாகத் தெரிகின்றது.
இங்கு கவனிக்கத்தக்க மற்றுமொரு விடயம் உள்ளது. ஷோபாசக்தியன் பாலியல் சுரண்டல்கள் தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டபோது, அவர் ‘பொய்களாலான’ ஒரு மறுப்பினை வெளியிட்டிருந்தார். அந்தப் பொய்களைக் கட்டுடைத்து ஆதாரங்களுடன் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அவர் எந்தப் பதிலும்கூறாமல், தன்னால் பெண்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புக்களுக்குப் பொறுப்புக்கூறாமல், அந்த அறிக்கை வெளிவருவதற்குக் காரணம் எனத் தான் கருதிய பெண்களை முகநூலில் தடைசெய்துவிட்டு தன் வாழ்வினைத் தொடர்ந்தார். அத்துடன் குறித்த பெண்கள் தொடர்பான பொய்களும் இவர்களால் பரவலாகக் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஷோபாசக்தி விடயத்தில் அவரைப்பற்றிய முறைப்பாடுகளை அறிக்கையிடுவதற்கான ஒரு அமைப்பு இருக்கவில்லை.
ஆனால் மு.மயூரன் விடயத்தில் முறைப்பாடுகளை அறிக்கைசெய்வதற்கான ஒரு தளமாக கட்சி இருந்தது. கட்சி உரிய முறையில் விசாரணைகளை மேற்கொண்டு, இதற்கெதிராக நடவடிக்கை எடுக்கும் என பெண்கள் நம்பினர். ஆனால் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியானது, இதுவரை போராடிப்பெற்ற பெண்களின் உரிமைகளை ஒருபடி பின்னோக்கிக் கொண்டுசென்றுள்ளது. கட்சி இந்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்களுடன் பேசாதது மத்திரமன்றி, முறையான விசாரணையும் மேற்கொள்ளாமல் மு.மயூரனை கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளது.
இதுவரை மு.மயூரன் தனக்கெதிராக கூறப்பட்ட பாலியல் குற்றச் சாட்டுக்களை பொதுவெளியில் மறுக்கவில்லை. இதனூடாக குறைந்தபட்ச பொறுப்புக்கூறலிலிருந்தும்கூட கட்சி மயூரனை விடுவித்துப் பாதுகாத்துள்ளது.
கட்சி உரியமுறையிலும், நேர்மையாகவும் நடவடிக்கையினை மேற்கொள்ளத் தவறியபட்சத்தில் பொதுவெளிக்குக் கொண்டுவரப்பட்ட இந்த விடயம் தொடர்பில் மு.மயூரன் பொறுப்புக்கூற வேண்டும்.
மு.மயூரன்மீதான முறைப்பாடுகள் கட்சிக்கு வழங்கப்பட்ட பின்னர், கட்சியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சில குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. கட்சி மிகவும் குறைந்தபட்ச பொறுப்புக்கூறலினையாவது உறுதிப்படுத்துவதற்கு, இது தொடர்பில், பெண்களாகிய எமக்கு விளக்க அறிக்கையொன்றினைப் பொதுமக்களும் பார்வையிடத்தக்கதாக பிரசுரிக்க வேண்டும். அத்துடன் மு.மயூரன் பொதுவெளியில் தன்மீதான முறைப்பாடுகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதையும் கட்சி வலியுறுத்த வேண்டும்.


Comments
Post a Comment