மு.மயூரனால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் சுரண்டல்களும் பொறுப்புக்கூறலும்
மெளனத்தின் நிழலில் நடக்கும் பாலியல் வன்முறையாளர்கள்: மு.மயூரனால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் சுரண்டல்களும் பொறுப்புக்கூறலும் அண்மையில் மதூர் சத்யாவின் பாலியல் சுரண்டல்களும், பெண்களின் காணொளிகளைப் பகிர்ந்தமையும், அவற்றை வைத்துப் பெண்களை மிரட்டியமையும் தொடர்பில் இந்தியாவின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு (CPI) புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மதூர் சத்யா கட்சியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டார். இது கட்சியினால் மேற்கொள்ளப்பட்ட முன்மாதிரியான செயற்பாடாக பலராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மதூர் சத்யா கைதுசெய்யப்பட்டிருந்தார். இந்தக் கைது பெண்களைப் பாலியல் சுரண்டல்களுக்குட்படுத்தியமை தொடர்பில் அல்லாமல், குறிப்பாக பெண்களின் காணொளிகளை வைத்து அவர்களை மிரட்டிய குற்றத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சிக்கு, கட்சியின் உறுப்பினரான மு.மயூரனினால் பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பாலியல் சுரண்டல்கள் தொடர்பான முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. கட்சிய...