Posts

Showing posts from March, 2026

பாலியல் சுரண்டல்களை சகித்துக்கொள்ளாத பல்கலைக்கழகச் சூழலே பால்நிலை சமத்துவத்திற்கான அடிப்படை

Image
  பாலியல் சுரண்டல்களை சகித்துக்கொள்ளாத பல்கலைக்கழகச் சூழலே பால்நிலை சமத்துவத்திற்கான அடிப்படை கடந்த  7 ம் திகதி ( 07 / 02 / 2026)  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் மற்றும் ஆங்கிலத் துறையின் ஏற்பாட்டில் , ‘ Counting and Cracking’  எனும் நாடகத்தின் எழுத்தாளர்  S.  ஷக்திதரன் மற்றும் நடிகர் குழுவுடனான உரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிகழ்வின் மேடையில் ,  பொய்களின் அடிப்படையில் காதல் மற்றும் உறவு என்ற பெயரில் பல பெண்களையும் ,  திருநங்கை ஒருவரையும் பாலியல் சுரண்டல்செய்த ஷோபாசக்தியும் இருந்த படமொன்று ஷோபாசக்தியினால் அவரது முகநூலில் பகிரப்பட்டிருந்தது.     கடந்த வருடம் ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் தொடர்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்ணிலைவாதிகள் ,  செயற்பாட்டாளர்கள் ,  சினிமா மற்றும் இலக்கியத்துறையைச் சார்ந்த பெண்களும் ,  குயர் சமூகத்தினரும் கையொப்பமிட்டு பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அவரது பாலியல் சுரண்டல் பாங்குகளை அம்பலப்படுத்தி ஒரு  அறிக்கையினை  வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் ஏனை...