ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல்களுக்கெதிரான கண்டன அறிக்கை
“ கலாசாரமானது ஆதிக்கத்தன்மையுடையதாக இருக்கும்போது, அது வன்முறையானதாக இருப்பது மட்டுமன்றி அனைத்து உறவுகளையும் அதிகாரத்திற்கான போரட்டங்களாகவும் கட்டமைக்கும் ” - பெல் ஹூக்ஸ் The Will to Change: Men, Masculinity, and Love “ நாம் ஆற்றல் மிக்கவர்கள். ஏனெனில் வன்முறையிலிருந்து வெளியேறி தொடர்ந்து வாழ்வதென்பதே நமது ஆற்றலுக்கு சாட்சி தான். இதன் மொத்த சாராம்சமும் முற்றுமுழுதாக நமது ஆற்றலையும் வளர்ச்சியையும் பற்றியது ” - ஓட்ரி லோர்ட் https://www.blackpast.org/african-american-history/1982-audre-lorde-learning-60s/ பெண்ணிய அக்கறையாளர்கள் இணைந்து தயாரித்த கண்டனக் கூட்டறிக்கையை உங்கள் கவனத்திற்கு வைக்கிறோம். எழுத்தாளர் நடிகர் ஷோபாசக்தி யின் பாலியல் சுரண்டல் நடவடிக்கைகளால் பாதிப்புக்குட்படுத்தப்பட்ட பல பெண்கள் மற்றும் குயர் சமூகத்தினரின் வாக்குமூலங்களை ஆழமாகவும் விரிவாகவும் பரிசீலித்ததின் அடிப்படையில், அவர்களுக்கான எங்களின் முழுமையான ஆதரவையும், ஆணதிகார துஷ்பிரயோகத்திற்கான எதிர்ப்பையும் பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும் பொறுப்பேற்று அத...