Posts

Showing posts with the label Shobasakthi's sexual predatory practices

ஷோபாசக்தியின் பாலியல் சுரண்டல் தொடர்பான அறிக்கைக்கெதிரான அவரின் மறுப்பு தொடர்பில்: பொய்களைக் கட்டுடைத்தல்

Image
பாலியல் சுரண்டல்களில் ஈடுபடுவோர் திட்டமிட்டவகையிலேயே பெண்களை தமது பாலியல் வேட்டைக்குப் பயன்படுத்துகின்றார்கள். இது வெறுமனே தனியொருவரினால் மேற்கொள்ளப்படும் எழுந்தமானமான செயற்பாடல்ல. இது பெண்களுக்கெதிரான கட்டமைப்புரீதியான வன்முறையின் பிரதிபலிப்பும் அதன் தொடர்ச்சியாகவும் இருந்துவருகின்றது. அந்தவகையில் பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல்களைச் சாத்தியப்படுத்தும் சூழலை உருவாக்குபவர்கள், பாலியல் சுரண்டலில் ஈடுபடுவோர், பாதிக்கப்பட்டவர்களின் குரல்களுக்கான பொதுமக்கள் கவனத்தினையும் செவிமடுத்தலையும் பல்வேறுபட்ட கட்டுக்கதைகள் மூலமாகவும் அப்பட்டமான பொய்களினடிப்படையிலும் இல்லாமற்செய்வோர், பாலியற் சுரண்டலில் ஈடுபட்டுவருபவர் தொடர்பில் அனுதாபத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவோர், அவருக்கான தளங்களை ஏற்படுத்திக்கொடுத்து அவரைத் தொடர்ந்து சாதாரணமயப்படுத்துவோர், இவ்வாறாக பெண்களுக்கெதிரான பாலியல் சுரண்டல் என்பது ஒரு சமூகக்கூட்டு வன்முறையாக, ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள்மீது இழைக்கப்படும் கட்டமைப்புரீதியான வன்முறையின் தொடர்ச்சியாக இருக்கின்றது. அந்தவகையில் இக்கட்டமைப்புரீதியான வன்முறைச் சுழற்சியினை உடைத்து, ப...